Courtallam
Courtallam

கலக்கல் காற்று…அலைமோதிய கூட்டம்…அதிர்ந்த குற்றாலம்…

நேற்று முன் தினத்திலிலிருந்தே குற்றால சீசனில் அதிரடியான மாற்றங்கள் இருந்து தான் வருகிறது. வறண்ட வானிலையோடு குளிக்க வந்தவர்களுக்கு ஏமாற்றத்தை மட்டுமே கொடுக்கும் விதமாகத் தான் கடந்த வாரத்துவக்கலிருந்து காட்சியளித்து வந்தது குற்றால அருவிகள். தண்ணீரின் அளவு குறைவாகவே காணப்பட்ட போதும். கடந்த வெள்ளிக்கிழமையன்று மாலை பெய்த திடீர் மழையால் அருவிகளில் நீர் வரத்து அதிகரித்தது.

இந்த திடீர் மழையால் ஐந்தருவியில் வெள்ளம் கரை புரண்டு ஓடியது. இதனால் குளிக்க தடை விதிக்கப்பட்டது. இந்த தடையானது நேற்று காலை முதல் விலக்கப்பட்டது. அதன் பின்னரே ஐந்தருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்க்பட்டனர். ஆனாலும் நேற்று கூட்டம் அதிகரித்த வண்ணமே இருந்து வந்தது குற்றாலத்தில்.

Falls
Falls (இன்று காலை பன்னிரெண்டு மணி நிலவரம்)

இந்நிலையில் இன்று காலை பன்னிரெண்டு மணி நிலவரப்படி குளிக்க வந்த சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அதிகமாகவே காணப்பட்டது. இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் சுற்றுலாப் பிரியர்கள் குற்றாலத்தை நோக்கி படை எடுக்கத் துவங்கியிருக்கின்றனர்.

ஐந்தருவி, உள்ளிட்ட பிரதான அருவிகளான பழைய குற்றாலம், மெயின் ஃபால்ஸ் உள்ளிட்ட அருவிகளிலும் கூட்டம் அலைமோதியது. அருவிகளில் குளித்து மகிழ பொது மக்கள் அதிகமான ஆர்வத்தை காட்டி வந்தனர்.

அருவிகளில் விழுந்த தண்ணீரால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்வோடு காணப்பட்டனர். காற்றின் வேகம் நேற்றை விட அதிகமாகவே உள்ளது. வெயிலின் தாக்கம் பெரிதாக சொல்லிக்கொள்ளும் அளவில் இல்லை. இன்று பொழுதைப் போக்கி, ஆனந்தமாக குளித்து மகிழும் சூழலே நண்பகல் பன்னிரெண்டு மணி வரை இருந்து வந்தது.