Latest News
வீக் எண்ட் வேற வருது!…குற்றாலம் போகலாமா வேண்டாமா…சீசன் எப்படி தான் இருக்கு?…
தமிழ்நாட்டின் முக்கியமான சுற்றுலாத்தலமாக இருப்பது குற்றாலம். ஆண்டு தோறும் சீசன் நேரத்தில் மட்டுமே இங்கு கூட்டம் குவியும். மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் சுற்றுலா பயணிகள் ஆர்வத்தோட்டு குற்றாலத்தை நோக்கி படையெடுக்க துவங்குவர்.
பொதுவாக ஜூன் மாத துவக்கத்திலிருந்து குற்றால அருவிகளில் தண்ணீர் விழத்துவங்கிவிடும். ஜூலை மாதத்தில் சீசன் கலைக்கட்டும் அனைத்த்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து விழும். குளிக்க வரும் பயணிகள் மகிழ்வோடு குளித்து விட்டு தங்களது பொழுதை போக்கி செல்வார்கள். இதுதான் வாடிக்கையாக இருந்து வருகிறது.
கேரள வனப்பகுதிகலில் பெய்து வரும் கனமழையின் காரணமாக குற்றால அருவிகள் அனைத்திலும் தண்ணீர் விழத்துவங்கியது. மலை பகுதிகளில் பெய்த கனமழையின் காரணமாக அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதனால் அருவிகளில் குளிக்க கடந்த மூன்று நாட்களாக தடை விதக்கப்பட்டது. இதனால் குற்றாலத்திற்கு வந்த சுற்றுலா பிரியர்கள் சோகத்துடன் திரும்பி சென்ற நிலை இருந்து வந்தது.
இன்று வியாழக்கிழமை அருவிகளில் குளிக்க கொடுக்கப்பட்ட தடை விலக்கப்பட்டது. இதனால் அங்கு மகிழ்ச்சியான சூழல் உருவானது. அனைத்து அருவிகளிலும் தண்ணீர் விழுந்து வருவதும், மிதமான காற்றுடன் அவ்வப்போது சாரல் விழுந்து வருவது குற்றாலத்தை ரசிக்க வந்தவர்களை மகிழ்ச்சி அடையச்செய்துள்ளது. கருகரு மேகங்கள் புடை சூழ ரம்மியான நிலை தான் இருந்து வருகிறது.
பொது மக்களின் கூட்டம் வேலை நாட்கள் என்பதால் சற்று குறைவாகவெ இருப்பதாக சொல்லப்படுகிறது. எனினும் அனைத்து அருவிகலிலும் தண்ணீர் விழுந்து வருவது, சீசன் நல்ல விதமாக இருந்து வருவது வார இறுதி நாட்களில் அதிகமான சுற்றுலா பயணிகளை இழுத்து வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.