tamilnadu
70 கோடி மதிப்புள்ள போதை பொருள்… கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் அதிர்ச்சி சம்பவம்…!
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் 70 கோடி மதிப்புள்ள போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது.
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் சந்தேகத்திற்கு இடமாக சுற்றித்திரிந்த நபரை பிடித்து போலீசார் விசாரணை செய்தனர். அப்போது பல கோடி மதிப்புள்ள போதை பொருள் சிக்கியது. பிடிபட்ட நபர் ராமநாதபுரத்தை சேர்ந்த பைசல் ரகுமானிடம் விசாரணை நடத்தப்பட்டதில் செங்குன்றத்தில் சோதனை நடத்தப்பட்டது.
செங்குன்றம் பகுதியில் மன்சூர் இப்ராகிம் ஆகிய இருவரை போலீசார் கைது செய்து அவர்களது குடோனில் பதிக்க வைத்திருந்த போதைப்பொருட்களை பறிமுதல் செய்தார்கள் மொத்தம் 6.92 கிலோ மெத்தப்பட்டபெண் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கின்றது. விசாரணையில் போதைப் பொருள்களை சென்னையில் இருந்து ராமநாதபுரம் கொண்டு சென்று அங்கிருந்து இலங்கைக்கு கடத்த திட்டமிட்டு இருப்பதாக தெரிவித்திருந்தார்கள்.