tamilnadu
தலையில் ஈட்டி பாய்ந்ததில் உயிரிழந்த சிறுவன்… நிவாரணம் அறிவித்த முதல்வர் மு க ஸ்டாலின்…!
ஈட்டி பாய்ந்து உயிரிழந்த சிறுவனுக்கு முதல்வர் மு.க ஸ்டாலின் இரங்கல் மற்றும் நிதி உதவி தெரிவித்து இருக்கின்றார்.
கடலூர் மாவட்டம், வடலூரில் தனியார் பள்ளியில் பயின்று வந்த மாணவன் சிலம்பம் பயிற்சி மேற்கொண்டு இருந்திருக்கின்றார். அப்போது மற்றொரு மாணவன் ஈட்டி எறிதல் பயிற்சி மேற்கொள்ளும் போது தவறுதலாக இந்த சிறுவனின் தலையின் ஈட்டி பாய்ந்ததில் ரத்தம் மூளை சாவு அடைந்து உயிரிழந்தார்.
உயிரிழந்த சிறுவனின் பெற்றோருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவியை மு.க ஸ்டாலின் தெரிவித்திருக்கின்றார். அவர் வெளியிலுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம் பார்வதிபுரம் கிராமத்தை சேர்ந்த செல்வன் கிஷோர். தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த நிலையில் கடந்த 24ஆம் தேதி பள்ளி மைதானத்தில் நடைபெற்ற ஈட்டியெறிதல் பயிற்சியின்போது எதிர்பாராத விதமாக சிறுவன் கிஷோரின் தலையில் ஈட்டி பாய்ந்ததால் பலத்த காயமடைந்த நிலையில் புதுச்சேரி மற்றும் சென்னையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டார் .
இருப்பினும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்ற செய்தியை கேட்டு மிகுந்த வருத்தமும் வேதனையும் அடைந்தேன். இந்த சம்பவத்தில் உயிரிழந்த சிறுவனின் பெற்றோருக்கும், அவரது உறவினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறேன். உயிரிழந்த சிறுவனின் பெற்றோருக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து மூன்று லட்சம் ரூபாய் வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன்” என்று அவர் தெரிவித்து இருக்கின்றார்.