கொரோனா வைரஸ் பாதிப்பால் தமிழகத்தில் உள்ள சிறைகளில் உள்ள கைதிகளை சந்திக்க உறவினர்கள் மற்றும் வழக்கறிஞர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் இப்போது உலகத்தையே அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த வைரஸ் பரவலைத் தடுப்பதற்காக விமான நிலையங்கள், அலுவலகங்கள் என எல்லாவற்றையும் மூட அரசுகள் உத்தரவிட்டுள்ளனர். தமிழ்நாட்டிலும் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் கோயில்கள் போன்றவை மூடப்பட்டுள்ளன. தமிழக அரசு மார்ச் 31 ஆம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்துள்ளது. மேலும் சில தனியார் நிறுவனங்களும் தங்கள் பணியாளர்களை வீடுகளில் இருந்தே வேலை செய்ய அறிவுறுத்தியுள்ள்ளன.
பாதுகாப்பு நடவடிக்கைகளின் அடுத்த கட்டமாக தமிழகத்தில் உள்ள சிறைகளில் இருக்கும் கைதிகளை இரண்டு வாரங்களுக்கு அவர்களது உறவினர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் உள்ளிட்டவர்கள் சந்திக்க காலம் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் கைதிகள் மற்றும் காவலர்கள் மற்றும் காவலர்களுக்கு பாதுகாப்பு நடவடிக்கையாக சோப்புகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் மருத்துவப் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.