tamilnadu
திடீர் வேலை நிறுத்த போராட்டத்தில் ரேஷன் கடை ஊழியர்கள்… என்னைக்கு தெரியுமா..?
தமிழகத்தில் செப்டம்பர் 5ஆம் தேதி ரேஷன் கடை ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கின்றது. தமிழகத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தின் கீழ் செயல்பட்டு வரும் 35 ஆயிரம் ரேஷன் கடை பணியாளர்கள் செப்டம்பர் 5ஆம் தேதி வேலை நிறுத்தத்தில் ஈடுபட இருக்கிறார்கள்.
வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக தமிழ்நாடு அரசு நியாய விலை கடை பணியாளர்கள் சங்க சிறப்பு தலைவர் அறிவித்திருக்கின்றார். பத்து அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி திருவள்ளூரில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் ரேஷன் கடை பணியாளர் சங்க தலைவர் அறிவித்திருக்கின்றார். அதன்படி வருகிற செப்டம்பர் 5ஆம் தேதி ரேஷன் கடைகள் இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.