tamilnadu
ஆண்டுக்கு ஒரு முறை பூக்கும் அபூர்வ மலர்… சேலத்தில் ஆச்சரியத்துடன் கண்டு செல்லும் மக்கள்…!
ஆண்டுக்கு ஒரு முறை பூக்கும் அரிய வகை பிரம்ம கமலம் பூக்கள் மலர்ந்துள்ளன.
தர்மபுரி மாவட்டம், பொன்னாகரத்தில் உள்ள வீடு ஒன்றில் இந்த பிரம்ம கமலம் பூக்கள் மலர்ந்திருக்கின்றது. அரிய வகை பூக்களில் ஒன்று பிரம்ம கமலப் பூக்கள். இதை நிஷகாந்தி என்று அழைப்பார்கள். ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே இந்த பூக்கள் பூக்கும். அதிலும் இரவு நேரங்களில் பூக்கும் அபூர்வ மலர்.
வெண்ணிறத்தில் மூன்று இதழ்கள் கொண்டுள்ள இந்த மலர் மிகவும் அழகானதாக இருக்கும். இந்த மலர் அமெரிக்காவின் மெக்சிகோவை பிறப்பிடமாகக் கொண்டது. பொதுவாக இந்த மலர்கள் ஜூலை மாதத்தில் மட்டும் பூக்கும் .இலங்கையில் இந்த மலரை சொர்க்கத்தின் பூ என்றே வர்ணித்து வருகிறார்கள்.
இந்து மதத்தில் பிரம்ம கமலம் புனிதமான மலராக பார்க்கப்படுகின்றது. ஆன்மீக ரீதியிலும் இந்த மலருக்கு சிறந்த முக்கியத்துவம் இருக்கின்றது. தர்மபுரி மாவட்டம் பொன்னாகரத்தை சேர்ந்த ஐயப்ப குருசாமி என்பவரின் வீட்டில் இந்தச் செடி உள்ளது. இவரது வீட்டில் உள்ள பிரம்ம கமலம் செடியில் இரண்டு பிரம்ம கமல பூக்கள் மலர்ந்து இருக்கின்றது.
நேற்று இரவு 9 மணி அளவில் இந்த பூக்கள் மலர்ந்தது. இதை பார்த்த அந்த வீட்டை சேர்ந்த அனைவரும் மகிழ்ச்சியடைந்தனர். இந்த பூக்கள் மலரும் போது என்ன வேண்டினாலும் அது நடக்கும் என்பது ஐதீகம். எனவே அவரது குடும்பத்தினர் பூக்களுக்கு பூஜை செய்து வேண்டுதல்களை வைத்திருந்தார்கள். இந்த தகவல் அறிந்த அக்கம் பக்கத்தை சேர்ந்த மக்களும் ஆர்வத்துடன் வந்து அந்த பூவை கண்டு ரசித்து வந்தார்கள்.