tamilnadu
72% ஆசிரியர் காலிபணியிடங்கள் இருக்கு… பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை…!
72 சதவீதம் ஆசிரியர் காலிபணியிடங்கள் இருக்கின்றது என்று ராமதாஸ் அறிக்கை வெளியிட்டிருக்கின்றார். இது தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருந்ததாவது: “தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் 10,000-ற்கும் கூடுதலாக ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருக்கின்றது.
இந்த பணியிடங்களில் 72.3 % பணியிடங்கள் வடமாவட்டங்களில் இருக்கின்றது. தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டிருக்கும் புள்ளி விவரம் மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது. தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்டங்களும் அரசுக்கு பொதுவானவை. அனைத்து மாவட்டங்களையும் அரசு சமமாக தான் நடத்த வேண்டும்,
எனவே வடமாவட்டங்களை கல்வியில் பின் தங்கிய மண்டலமாக அறிவித்து அந்த மண்டலத்திற்கான ஆசிரியர் நியமனங்களில் மாவட்ட ஒதுக்கீட்டு முறையை செயல்படுத்த வேண்டும். ஒவ்வொரு மாவட்டத்திலும் அந்தந்த மாவட்டங்களை சேர்ந்தவர்களே பள்ளி ஆசிரியர்களாக நியமிக்கப்பட வேண்டும்.
அவர்கள் வேறு மாவட்டங்களுக்கு மாறுதல் பெற்றுச்செல்ல மாட்டார்கள். சொந்த மாவட்டம் என்பதால் கூடுதல் அக்கறையுடன் பணி செய்ய விரும்புவார்கள். எனவே வட மாவட்ட ஆசிரியர் நியமனத்தில் மாவட்ட ஒதுக்கீட்டை பள்ளிக்கல்வித்துறை செயல்படுத்த வேண்டும்” என்று அந்த அறிக்கையில் அவர் தெரிவித்து இருக்கின்றார்.