வரும் 19ஆம் தேதிக்கு பிறகு அமைச்சர் உதயநிதியை துணை முதல்வர் என்று அழைக்க வேண்டும் என அமைச்சர் ராஜகண்ணப்பன் பேசி இருக்கின்றார். தமிழகம் முழுவதும் தமிழ் புதல்வன் திட்டம் இன்று தொடங்கப்பட்டிருக்கின்றது. கோவையில் முதல்வர் மு க ஸ்டாலின் இந்த திட்டத்தை தொடங்கி வைத்தார்.
இந்நிலையில் ராமநாதபுரத்தில் தமிழ் புதல்வன் என்ற நிகழ்ச்சி இன்று அமைச்சர் ராஜகண்ணப்பன் தலைமையில் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய ராஜ கண்ணப்பன் கூறியிருந்ததாவது துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தான் என கூறினார். உடனே இப்போது சொல்ல கூடாது. ஆகஸ்ட் 19ஆம் தேதிக்கு பிறகு தான் அவர் துணை முதல்வர் என்று கூறியிருந்தார். இதையடுத்து உதயநிதி ஸ்டாலின் வரும் 19ஆம் தேதி துணை முதலமைச்சராக பொறுப்பு ஏற்பாரா? என்று பலருக்கும் சந்தேகம் எழுந்துள்ளது.

