tamilnadu
தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில்… இந்த 4 மாவட்டத்திலும் மழை வெளுக்க போகுது…!
தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “மேற்கு திசை காற்றின் வேகமா மாறுபாடு காரணமாக தமிழகத்தில் பல்வேறு பகுதிகளிலும் மழை பெய்ய வாய்ப்பு இருக்கின்றது.
மேலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசான தமிழன் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. வெறும் தமிழகத்தில் கோவை, திருப்பூர். நீலகிரி மற்றும் தேனி ஆகிய மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் சென்னையை பொருத்தவரையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் நகரில் ஒரு சில பகுதிகளில் மிதமான மலைக்கு வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கின்றது