Latest News
இந்த மாவட்ட காரர்கள் எல்லாம் உஷாரு… அடுத்த ரெண்டு நாளைக்கு மழை பெய்யப் போகுதாம்…
தமிழ் நாட்டை பொறுத்த வரை கடந்த சில நாட்களாகவே வெயில் வெளுத்து வாங்கி வருகிறது. அவ்வப்போது சில இடங்களில் திடீர் மழை பெய்து ஆச்சர்த்யத்தையும் கொடுத்தது. தமிழ் நாட்டின் ஒரு சில மலை சார்ந்த பகுதிகளில் அதிகப்படியான மழை பெய்தது. அதே போல மாவட்டத்தின் உள் பகுதிகளிலும் பெய்த திடீர் மழை இயல்பு வாழ்க்கையை பாதித்தது சில நேரங்களில்.
தென் மேற்கு பருவ மழை தீவிரமடைந்து வந்ததன் காரணமாக பல இடங்களில் மழை பெய்தும் வந்தது. மேற்கு திசை காற்றின் காரணமாக தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் மழை அவ்வப்போது பெய்தது.
குறிப்பாக தென் தமிழக கடலோர மாவட்டங்களில் காற்றின் வேகம் அதிகரிக்கும் என எச்சரிக்கையும் விடுத்திருந்தது சென்னை வானிலை ஆய்வு மையம். அப்படி சொல்லப்பட்ட இடங்களில் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப் பட்டிருந்தது.
இந்நிலையில் தமிழகத்தில் உள்ள சில மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் விடுத்துள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம். நாளை மற்றும் நாளை மறு நாள் வரை இந்த மஞ்சள் அலர்ட் நீடிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பின் படி நீலகிரி, கோயம்பத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல் அகிய மாவட்டங்களுக்கு மட்டுமே தான் இந்த மஞ்சள் அலர்ட் பொருந்தும் சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள இந்த அலர்ட்டின் படி.
இதனிடையே சென்னை பெரு நகரத்தின் தட்ப வெப்ப நிலையை பற்றிய அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம். சென்னையின் ஒரு சில பகுதிகளில் மாலை மற்றும் இரவு நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் சொல்லியிருக்கிறது.