காலாண்டு விடுமுறை… மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்… பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட அறிவிப்பு..!

காலாண்டு விடுமுறை… மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்… பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட அறிவிப்பு..!

காலாண்டு விடுமுறை நீட்டிக்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை 9 நாட்களாக வழங்கப்பட வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்களுக்கு ஆசிரியர்கள் சங்கம் கோரிக்கை வைத்திருந்தது. முன்னதாக கடந்த ஆண்டுகளில் பள்ளிகளுக்கு காலாண்டு தேர்வுக்கு 9 நாட்கள் விடப்படும். ஆனால் நடப்பு ஆண்டு செப்டம்பர் 28ஆம் தேதி முதல் அக்டோபர் 2-ம் தேதி வரையில் 5 நாட்கள் மட்டுமே விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

இதில் ஞாயிற்றுக்கிழமை அக்டோபர் இரண்டாம் தேதி காந்தி ஜெயந்தி அரசு விடுமுறை இடையில் இரண்டு நாட்கள் மட்டுமே காலாண்டு தேர்வு விடுமுறையாக இருப்பதாக ஆசிரியர்கள் கருத்து தெரிவித்திருந்தார்கள். இந்நிலையில் இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறையின் முதன்மை செயலாளரிடம் பேசிய பிறகு அறிவிப்பு வெளியாகும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் காலாண்டு விடுமுறையை நீட்டிக்கப்பட்டு தற்போது அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது. அதன்படி காலாண்டு விடுமுறை அக்டோபர் ஆறாம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 7-ம் தேதி திங்கட்கிழமை பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது. இரண்டு தேர்வு விடுமுறையை நீட்டிக்க வேண்டும் என பல்வேறு தரப்பிலிருந்து கோரிக்கை விடுத்த நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கின்றது.