tamilnadu
கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணய வெளியீட்டு விழா… வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி…!
முன்னாள் முதல்வர் மு கருணாநிதியின் நினைவு நாணய வெளியீட்டு விழா இன்று மாலை நடைபெற உள்ளது. தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தலைமையில் இந்த நிகழ்ச்சி நடைபெற இருக்கின்றது. இதில் மத்திய அமைச்சர் ராஜநாத் சிங் கலந்து கொண்டு நாணயத்தை வெளியிட இருக்கின்றார். இதனை முதல்வர் மு க ஸ்டாலின் பெற்றுக் கொள்கிறார். பல்வேறு அரசியல் தலைவர்கள் பிரபலங்கள் கலந்து கொள்கிறார்கள்.
இந்த விழாவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்திருக்கின்றார். இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் செய்தி குறிப்பில் தெரிவித்திருந்ததாவது: “கருணாநிதி நூற்றாண்டு நினைவு 100 ரூபாய் நாணயம் வெளியீட்டு விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது அறிந்து மிக மகிழ்ச்சி அடைகிறேன்.
இந்தியாவின் புகழ்மிக்க தலைவர்களில் ஒருவரான கருணாநிதியின் நூற்றாண்டு நினைவாக நடைபெறும் இந்த நிகழ்ச்சி மிக முக்கியமானது. அரசியல் இலக்கியம் சமுதாயத்தில் உயர்ந்த தலைவர்களில் ஒருவர் கருணாநிதி. தமிழ்நாட்டு வளர்ச்சியிலும், இந்தியாவின் வளர்ச்சியிலும் எப்போதும் ஆர்வம் கொண்டவராக இருந்திருக்கின்றார்.
அரசியல் தலைவராக முதலமைச்சராக கருணாநிதி நாட்டின் வரலாற்றில் அழியாத சுவடுகளை விட்டுச் சென்றிருக்கின்றார். மக்களால் முதலமைச்சராக பலமுறை தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் கருணாநிதி மக்கள் கொள்கை அரசியலை மிகவும் நன்றாக புரிந்து வைத்திருந்தவர். கருணாநிதி நூற்றாண்டு நினைவு நாணயம் வெளியிடப்பட உள்ள நிலையில் அவரின் நினைவுகளையும் அவரின் கொள்கைகளையும் நினைவு கொள்வது மகிழ்ச்சி தருகின்றது. இந்த நாளில் கருணாநிதிக்கு எனது இதயபூர்வமாக மரியாள் செலுத்துகிறேன்” என்று அவர் குறிப்பிட்டு இருந்தார்.