தங்க நகை என்பது இந்தியர்களின் வாழ்வியில் முறைப்படி தவிர்க்க முடியாத ஆபரணமாகவே தான் இருந்து வருகிறது. சடங்குகள், சுப நிகழ்ச்சிகளில் முதல் இடம் தங்கத்திற்கும் கொடுக்கப்படும். அணிகலனாக பார்க்க படுவதோடு மட்டுமல்லாமல் அது முதலீட்டு பொருளாகவும் மாறி விட்டது.
சர்வதேச பொருளாதார நிலை, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இதை வைத்து தான் தங்கத்தின் விலை தீர்மாணிக்கப்படுகிறது. இதனால் தான் இதில் ஏற்ற, இறங்கள் இருந்து கொண்டே இருக்கும். விலையில் நாள் தோறும் மாற்றங்கள் இருந்து கொண்டே தான் இருக்கும்.
கடந்த சில நாட்களாகவே தங்கத்தின் விலை தொடர்ந்து இறங்கு முகத்திலேயே இருந்து வருகிறது. இது தங்க நகையின் பிரியர்களை அதிகமாக மகிழ்ச்சி அடையச்செய்துள்ளது.
இருபத்தி இரண்டு கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை நேற்றை விட சவரனுக்கு நூற்றி அறுபது குறைந்துள்ளது. ஒரு சவரன் ஐம்பத்தி மூவாயிரத்து இரு நூற்றி என்பது (₹53,280/-) ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

கிராம் ஒன்றிற்கு இருபது ரூபாய் குறைந்து ஆறாயிரத்து அறனூற்றி அறுபது (₹6 650/-)ரூபாய்க்கு விறகப்படுகிறது சென்னையில் அதே போல வெள்ளியின் விலை நேற்றை விட ரூபாய் ஒன்று குறைந்து கிராம் தொன்னூற்றி நாலு ரூபாய் ஐம்பது பைசாவாக (₹94.50/-) உள்ளது.
ஒரு கிலோ வெள்ளி தொன்னூற்றி நாலாயிரத்து ஐனூறு (₹94,500/-) ரூபாயாக இருக்கிறது இன்றைய தினம் சென்னையின் விற்பனை விலையாக.
இந்த வாரத்துவக்கத்திலிருந்தே தங்கத்தின் விலை தொடர்ச்சியாக இறங்கு முகத்திலேயே இருந்து வருகிறது. இது நகை பிரியர்களுக்கு மட்டும் இனிப்பான செய்தியாக இருந்து விடாமல் முதலீட்டாளர்களுக்கும் மகிழ்ச்சி தரும் செய்தியாகத் தான் இருக்கிறது.











