Latest News
இலவச வேட்டி, சேலை வழங்கும் திட்டம்… தமிழக அரசு வெளியிட்ட அரசாணை…!
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இலவச வேட்டி, சேலை வழங்கும் திட்டத்திற்கு ரூபாய் 100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை தமிழகத்தில் மிகச் சிறப்பாக கொண்டாடப்படும் திருநாள். தைப்பொங்கல், மாட்டுப்பொங்கல், காணும் பொங்கல் என்று மூன்று நாட்கள் மிக சிறப்பாக தமிழர்களால் கொண்டாடப்படும் பண்டிகை.
இந்த பண்டிகையை முன்னிட்டு ரேஷன் கடைகளில் வேட்டி, சேலை மற்றும் பொங்கல் பொருட்கள் அனைத்தும் வழங்கப்படுவது வழக்கம் வரும். பொங்கல் பண்டிகைக்கு இலவச வேட்டி சேலை வழங்கும் திட்டத்திற்கு ரூபாய் 100 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு ஆணை பிறப்பித்திருக்கின்றது.
ரேஷன் கடைகளில் வழங்குவதற்காக 1. 77 கோடி சேலை மற்றும் 1.77 கோடி வேட்டிகள் உற்பத்தி செய்ய அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் பயனாளிகளுக்கு வேட்டி, சேலை கிடைப்பதை விரல் ரேகை மூலம் பதிவு செய்து அதனை உறுதி செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது,
பொது மக்களுக்கு வேட்டி சேலை வழங்கும் நடைமுறையை கண்காணிக்க வருவாய் துறை முதன்மைச் செயலாளர் தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டு கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.