மேல் பதவிக்காக தன்னைத் தானே தாக்கிக் கொண்ட இந்து மக்கள் கட்சி நிர்வாகி – திருப்பூரில் பரபரப்பு !

மேல் பதவிக்காக தன்னைத் தானே தாக்கிக் கொண்ட இந்து மக்கள் கட்சி நிர்வாகி – திருப்பூரில் பரபரப்பு !

திருப்பூரைச் சேர்ந்த இந்து மக்கள் கட்சி பிரமுகர் பகவான் நந்து தன்னைத்தானே அரிவாளால் வெட்டிக்கொண்டது அம்பலமாகியுள்ளது.

திருப்பூர் வடக்கு மாவட்டத்தைச் சேர்ந்தவர் பகவான் நந்து என்பவர். இவர் இந்து மக்கள் கட்சியின் துணைப்பொதுச் செயலாளராக செயல்பட்டு வந்துள்ளார். இந்நிலையில் கையில் வெட்டுக்காயத்தோடு காவல் நிலையத்துக்குச் சென்ற அவர், தன்னை சிலர் வெட்டிவிட்டதாக புகார் அளித்துள்ளார்.  இது சம்மந்தமாக வழக்குப் பதிவு செய்த போலிஸார், விசாரணை நடத்தியுள்ளனர்.

ஆனால் போலிஸார் நடத்திய விசாரணையில் நந்து, தனது ஓட்டுனரோடு சேர்ந்து இந்த நாடகத்தை ஆடியுள்ளது தெரியவந்துள்ளது. கட்சியில் பதவி பெறுவதற்காக அவர் இந்த நாடகத்தை நடத்தியுள்ளார் என சொல்லப்படுகிறது. இந்த சம்பவனத்தால் திருப்பூர் மாவட்டத்தில் பரபரப்பான சூழல் உருவாகியுள்ளது.