Latest News
ஆன்லைனில் தனியுரிமையை மதிக்க வேண்டும்… பெருநகர காவல்துறை எச்சரிக்கை…!
தனிநபரின் படங்களை அனுமதி இன்றி சமூக வலைதள பக்கங்களில் வெளியிட வேண்டாம் என்று சென்னை பெருநகர காவல் துறை எச்சரிக்கை விடுத்திருக்கின்றது .ஆன்லைனில் தனி உரிமையை மதிக்க வேண்டும் என்றும் சென்னை காவல்துறை சமூக வலைதளங்களில் பதிவிட்டிருக்கின்றது.
இது தொடர்பாக சென்னை காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருந்ததாவது: “ஆன்லைனில் தனி உரிமையை மதிக்கவும், தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் பிரிவு 66L பிரிவின் படி தனிநபரின் படங்களை அனுமதி இல்லாமல் சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டால் மூன்று ஆண்டுகள் வரை சிதை தண்டனை அல்லது மூன்று லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும். மேலும் தேசிய சைபர் கிரைம் உதவி எண் 1930” என்று சென்னை காவல்துறை தன்னுடைய சமூகவலைதள பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனுமதியின்றி தனிநபரின் படங்களை அனுமதியின்றி சமூக வலைத்தளங்களில் வெளியிட்டால் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை அல்லது ரூ.3 லட்சம் வரை அபராதம். ஆன்லைனில் தனியுரிமையினை மதிக்கவும்!#safety #Digital #awareness #Aval #Cybercrime #Helpline pic.twitter.com/Utm5M53zAI
— GREATER CHENNAI POLICE -GCP (@chennaipolice_) August 28, 2024