பாவப்பட்ட பரிதாப ஜீவன்கள்தான் வாயில்லா ஜீவன்களாக கருதப்படும் கால்நடைகள், ஆடு, மாடு, நாய், குரங்கு போன்றவற்றுக்கு இருக்கும் ஒற்றுமை, பாசம் நல்ல குணங்கள் பல மனிதர்களுக்கு இல்லை. இருப்பினும் தூய மனதுடைய மனிதர்கள் விலங்குகளிடம் பாசம் காட்டும் மனிதர்கள் பலர் இவ்வையகத்தில் வாழ்ந்து வருகின்றனர்.
மதுரை மாவட்டம் மேலுர் டவுன் இன்ஸ்பெக்டர் சார்லஸ் என்பவர் அந்த பகுதியில் உள்ள பசுமாடுகளுக்கு பழம் உள்ளிட்ட உணவுகளை தினம் தோறும் கொடுத்து வந்துள்ளார்.
அதனால் அந்த பசுமாடுகள் இருக்கும் மேலூர் பஸ் ஸ்டாண்ட் பகுதிக்கு வந்தாலே பசுமாடு ஒன்று அவரை தேடி வந்து பாசம் காட்டுகிறது அவரிடம் உணவு பெற்று செல்ல துடிக்கிறது.
இன்ஸ்பெக்டர் சார்லசுக்கும் பசுவுக்கும் உண்டான இந்த பாசம் பலரை நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது.