யார்தான் இவ்வுலகில் நல்லவர் என்றே நம்ப முடியவில்லை காலம் கலிகாலம் என்று சொல்வார்கள் அது உண்மை என மெய்பிப்பது போல பல சம்பவங்கள் நடைபெற்று வருகிறது.
தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி காவல் நிலையத்தில் ஏட்டாக பணிபுரிந்தவர் கற்குவேல் இவர் இரவுப்பணிகளை விரும்பி வாங்கியதாக தெரிகிறது. இரவுப்பணிகளை விரும்பி வாங்கிய இவர் அப்பகுதிகளில் பல வீடுகளில் புகுந்து கொள்ளையடித்துள்ளார்.
இவர் 2017ல் காவல்துறை பணிக்கு தேர்வாகியுள்ளார். நெல்லை மாநகரத்தில் பெருமாள்புரம் பகுதியில் நடந்த கொள்ளை சம்பவத்தில் சிக்கியுள்ள இவரின் கைரேகைகள் நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் நடந்த பல கொள்ளை சம்பங்களில் ஒத்துப்போய் உள்ளது.
இவர் மீது பாளையங்கோட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.