Latest News
மகாவிஷ்ணு அதிரடி கைது… வந்து இறங்கியதும் தட்டி தூக்கிய போலீஸ்… தீவிர விசாரணை…!
சென்னை விமான நிலையத்திற்கு வந்து இறங்கிய மகாவிஷ்ணுவை போலீசார் கைது செய்த நிலையில் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சென்னை, அசோக் நகர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மூடநம்பிக்கைகளை விதைக்கும் வகையில் சொற்பொழிவு நடத்திய மகாவிஷ்ணு மீது பலரும் புகார் அளித்து வந்தார்கள். அது மட்டும் இல்லாமல் அந்த பள்ளியை சேர்ந்த மாற்றுத்திறனாளி ஆசிரியர் ஒருவரையும் காயப்படுத்தும் வகையில் சொற்பொழிவு ஆற்றியிருக்கின்றார்.
அவர் சொற்பொழிவு ஆற்றிக் கொண்டிருந்தபோதே மதரீதியாக மாணவர்களிடம் பேச வேண்டாம் என்று அந்த மாற்றுத்திறனாளி ஆசிரியர் கண்டித்து இருக்கின்றார். அதற்கு அவரையும் மைக்கில் மகாவிஷ்ணு பேசிய அவமானம் படுத்தியிருக்கின்றார். இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. இது தொடர்பாக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலரும் தெரிவித்து இருந்தார்கள்.
மேலும் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். இதை தொடர்ந்து அசோக் நகர் காவல் நிலையத்தில் மகாவிஷ்ணு மீது நேற்று புகார் கொடுக்கப்பட்டது. அனைத்து உலக மாற்றுத்திறனாளிகள் பாதுகாப்பு உரிமைகளுக்கான சங்கம் சார்பில் சைதாப்பேட்டை காவல் நிலையத்திலும் புகார் கொடுக்கப்பட்டது. அந்த புகாரில் அடிப்படையில் நேற்று போலீசார் விசாரணை தொடங்கிய போது அவர் இந்தியாவில் இல்லை ஆஸ்திரேலியாவில் இருப்பதாக தகவல் கிடைத்தது.
அவர் தப்பி ஆஸ்திரேலியாவுக்கு சென்று தலைமறைவாகிவிட்டார் என்று கூறிவந்தனர். இதையடுத்து மகாவிஷ்ணு வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில் நான் எங்கும் ஓடி ஒழியவில்லை. தலைமறைவாகவும் இல்லை. நான் ஆஸ்திரேலியாவில் இருக்கின்றேன். நாளை சென்னை வருவேன். சென்னை வந்தவுடன் அமைச்சர் அன்பில் மகேஷ் சந்தித்து உரிய விளக்கம் கொடுப்பேன் என்று தெரிவித்திருந்தார்.
அதன்படி இன்று மகாவிஷ்ணு வெளிநாட்டிலிருந்து சென்னை ஏர்போர்ட்டுக்கு வந்து இறங்கிய உடனே காவல்துறையினர் அவரை அதிரடியாக கைது செய்தனர் . மேலும் அவர் மீது எழுந்த இந்த புகார் குறித்து தீவிர விசாரணை மேற்கொள்வதற்கு சைதாப்பேட்டை காவல் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கின்றது. காவல் நிலையங்களில் அதிக அதிகாரிகள் குவிக்கப்பட்டு இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.