Latest News
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு… விக்கிரவாண்டியில் நடத்த போலீஸ் அனுமதி…!
நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டை விக்கிரவாண்டியில் நடந்த அனுமதி கேட்டிருந்த நிலையில் போலீஸ் அனுமதி வழங்கியிருக்கின்றது.
நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்கின்ற புதிய கட்சியை தொடங்கி தமிழக அரசியலில் களமிறங்க இருக்கின்றார். 2026 ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க வேண்டும் என்பது நடிகர் விஜயின் குறிக்கோளாக இருக்கின்றது. சமீபத்தில் தமிழக வெற்றிக்கழகத்தின் கொடியை நடிகர் விஜய் அறிமுகம் செய்து வைத்தார்.
அத்துடன் கட்சிக்கு புதிய உறுப்பினர்கள் சேர்க்கையை தமிழகம் முழுவதும் பூத் வாரியாக விரிவுபடுத்த அறிவுறுத்தி இருக்கின்றார். 1 கோடி முதல் 1.50 கோடி உறுப்பினர்களை முதல் கட்டமாக சேர்க்க அவர்கள் உத்தரவிட்டிருக்கிறார்கள். இந்நிலையில் நடிகர் விஜய்யின் அரசியல் வருகையால் எந்த கட்சி பாதிப்படையும் என்று எதிர்பார்ப்பு எழுந்திருக்கின்றது.
இந்நிலையில் நடிகர் விஜய் கட்சியின் தொடக்கத்தை எழுச்சி ஏற்படுத்தும் வகையில் பிரம்மாண்டமான முதல் அரசியல் மாநாட்டை நடத்த திட்டமிட்டு இருக்கின்றார். திருச்சி, சேலம், மதுரை, தஞ்சை, புதுக்கோட்டை, இராமநாதபுரம், சென்னை உள்ளிட்ட பல இடங்களில் மாநாட்டை நடத்த கட்சி நிர்வாகிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
முதலில் திருச்சியில் நடத்துவதற்கு அனுமதி கூற முயற்சி செய்த நிலையில் அதில் பல சிக்கல்கள் ஏற்பட்டது. இதையடுத்து விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் மாநாடு நடத்துவதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டிருக்கின்றது வருகிற 23ஆம் தேதி முதல் மாநாட்டை நடத்த விஜய் கட்சி நிர்வாகிகள் தயாராகி வருகின்றன,
மாநாடு நடத்துவதற்கு சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள வி சாலை என்ற இடத்தில் 85 ஏக்கர் பரப்பளவு கொண்ட நிலம் தேர்வு செய்யப்பட்டிருக்கின்றது. இங்கு மாநாடு நடத்த விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு இடம் அனுமதி கேட்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக 21 கேள்விகள் கேட்கப்பட்ட நிலையில் அதற்கு விஜய் கட்சி சார்பில் பதிலும் அளிக்கப்பட்டது. இதை தொடர்ந்து மாநாட்டுக்கு இன்று அனுமதி வழங்கப்பட்டுள்ளது. விழுப்புரம் டிஎஸ்பி சுரேஷ் இதற்கான அனுமதி கடிதத்தை வழங்கி இருக்கின்றார்.