tamilnadu
தொடர்ந்து அரங்கேறும் கடற்கொள்ளையர்களின் அட்டூழியம்… தமிழக மீனவர்கள் மீது தாக்குதல்…!
தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது.
வேதாரண்யம் அருகே கோடியக்கரை கடல் பகுதியில் தமிழக மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தார்கள். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்கொள்ளையர்கள் தமிழக மீனவர்களை தாக்கியதாக புகார் அளிக்கப்பட்டது.
மீன் பிடிக்க சென்ற நான்கு வீரர்கள் மீது தாக்குதல் நடத்தியது மட்டுமில்லாமல் அவர்கள் வைத்திருந்த 4 லட்சம் மதிப்புள்ள வலைகள், ஜிபிஎஸ் கருவிகள் போன்றவற்றை பறித்து சென்றதாக கூறப்படுகின்றது. இரும்பு கருவி உள்ளிடவற்றால் தாக்கப்பட்டதில் மீனவர்கள் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கின்றது.
கடலில் மீன் பிடிக்கும் தமிழக மீனவர்கள் மீது இலங்கை மீனவர்கள், இலங்கை கடற்படையினர் அவ்வபோது தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் தற்போது கோடியக்கரை அருகே மீன்பிடித்த மீனவர்களை இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்கி அவர்களிடமிருந்து பொருட்களை கொள்ளை அடித்து சென்ற சம்பவம் மீனவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது. இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மீனவர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.