Latest News
சதுரகிரியில் சாமி தரிசனம்… 30ஆம் தேதி முதல் 4 நாட்களுக்கு அனுமதி… மகிழ்ச்சியில் பக்தர்கள்…!
சதுரகிரியில் பக்தர்கள் தரிசனம் செய்வதற்கு வரும் 30ம் தேதி முதல் 4 நாட்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டம், வந்திராயிருப்பு அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலை உச்சியில் பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தர சந்தன மகாலிங்கம் கோவில் அமைந்திருக்கின்றது. ஒவ்வொரு மாதமும் அமாவாசை மற்றும் பௌர்ணமி, பிரதோஷ தினங்களையும் முன்னிட்டு நான்கு நாட்களுக்கு மட்டும் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படும்.
குறிப்பாக ஆடி, தை மற்றும் புரட்டாசி மாகாலயா அமாவாசை அன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் சதுரகிரிக்கு வந்து சாமி தரிசனம் செய்வார்கள். இந்த ஆண்டுக்கான புரட்டாசி மாத அமாவாசை வருகிற 2-ம் தேதி கொண்டாடப்படுகின்றது. இதை எழுதி பக்தர்கள் வருகிற 30-ஆம் தேதி 3-ம் தேதி வரை சதுரகிரியில் சாமி தரிசனம் செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கின்றது.
மகாலயா அமாவாசை என்பதால் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள். இதையொட்டி சதுரகிரி மலை அடிவாரமான தானிப்பாறை மற்றும் கோவில் பகுதிகளில் அடிப்படை வசதிகள் செய்வதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றது. திருமங்கலம் மதுரை விருதுநகர் வஞ்சிராயிருப்பு ஸ்ரீவில்லிபுத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட்டு இருக்கின்றது.
10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களை கோயிலுக்கு அழைத்து வருவதை தவிர்க்க வேண்டும் என்று கூறப்படுகின்றது. இரவில் தங்குவதற்கு அனுமதி கிடையாது. ஓடைகளில் இறங்கி குளிக்க கூடாது உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் வனத்துறையினரால் விதிக்கப்பட்டுள்ளது. வருகிற 30-ஆம் தேதி அதையடுத்து 2-ம் தேதி அமாவாசை அன்று சுந்தர சந்தன மகாலிங்கத்திற்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.