Connect with us

மெரினா பீச்சில் அலை கடலென குவிந்த மக்கள்… காணும் பொங்கலுக்கு கூட இப்படி இருக்காது…!

Latest News

மெரினா பீச்சில் அலை கடலென குவிந்த மக்கள்… காணும் பொங்கலுக்கு கூட இப்படி இருக்காது…!

மெரினா பீச்சில் விமான சாகசத்தை காண்பதற்கு ஏராளமான மக்கள் குவிந்தனர்.

மெரினா கடற்கரையில் பொதுவாக காணும் பொங்கல் தினத்தன்று தான் மக்கள் அதிக அளவில் வருகை தருவார்கள். அது கூட மாலை நேரத்தில் வெயில் ஓய்ந்த பிறகு அதிக அளவு கூட்டம் இருக்கும். ஆனால் இன்று கொளுத்தும் வெயிலை கூட பொருட்படுத்தாமல் பொதுமக்கள் கடற்கரை முழுவதும் திரண்டு இருந்த புகைப்படங்கள் காண்போரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

மேலும் வயது வித்தியாசம் இல்லாமல் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை மெரினா பீச்சில் குவிந்ததற்கு காரணம் விமான சாகசம் தான். இன்று இந்திய விமானப்படையின் 92 ஆவது ஆண்டு தினத்தை முன்னிட்டு விமான படையினர் சாகச நிகழ்ச்சியை நடத்தினார்கள். இந்த நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு முதல்வர் மு க ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், முப்படை தளபதி அணில் சவுரா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டார்கள்.

இந்த விமான நிகழ்ச்சியில் இந்திய வான்படையினர், பாராசூட், ஹெலிகாப்டர், இலகு ரக விமானம் போர் விமானம் என்று வான்படைக்கு சொந்தமான விமானங்களின் மூலம் சாகசங்களை செய்து காட்டி மெரினாவில் இருந்தவர்களை வியப்பில் ஆழ்த்தினார்கள் என்று தான் கூற வேண்டும். இந்த சாகசத்தை காண்பதற்கு தான் மக்கள் அலைகடலென திரண்டு இருக்கிறார்கள்.

கடற்கரை மணற்பரப்பை தெரியாத அளவுக்கு மெரினா கடற்கரை மக்கள் வெள்ளத்தால் நிரம்பி வழிந்தது. மெரினா கடற்கரையில் நிகழ்ச்சியை கண்டு ரசிப்பதற்காக பலரும் குடும்பத்துடன் வந்திருந்தார்கள். இதில் பலர் தங்களின் குழந்தைகளை தொலைத்து விட்டு கண்ணீருடன் தேடி அலைந்த பரிதாப சம்பவமும் அரங்கேறியது.

Continue Reading
You may also like...

More in Latest News

To Top