எக்ஸ்பிரஸ் ரயில் நிற்பதற்கு முன்பாகவே பயணி ஒருவர் கீழே இறங்க முயற்சி செய்தபோது ரயிலுக்கு அடியில் சென்ற விபரீதம் நடந்திருக்கின்றது. திருச்சியில் பல்லவன் ரயில் நிற்பதற்கு முன்பாகவே பயணி ஒருவர் கீழே இறங்கியபோது ரயிலுக்கு அடியில் சிக்கிக் கொண்டிருக்கின்றார்.
உடனடியாக ரயில்வே போலீசாரும் பொதுமக்களும் இணைந்து ரயிலுக்கு அடியில் சிக்கிய பயணியை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். கடும் சிரமத்திற்கு பிறகு ரயிலுக்கு அடியில் சிக்கிய வரை போலீசார் பத்திரமாக மீட்டனர்.
படுங்காயங்களுடன் மீட்கப்பட்ட அவர் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை கொடுக்கப்பட்டு வருகின்றது. சற்று பொறுமையுடன் காத்திருந்து ரயில் தண்டவாளத்தில் முழுமையாக நின்றவுடன் இறங்க வேண்டும் என்று ரயில்வே பாதுகாப்பு போலீசார்கள் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.