அடுத்த பாரா ஒலிம்பிக் போட்டியில் தங்கப் பதக்கம் வெல்வேன் என்று தமிழக வீரர் மாரியப்பன் உறுதி அளித்து இருக்கின்றார்.
இந்த ஆண்டு பாரிஸில் நடைபெற்ற 2024 ஆம் பாரா ஒலிம்பிக் தொடரில் இந்திய சார்பில் ஏகப்பட்ட வீரர் வீராங்கனைகள் பங்கேற்று பதக்கங்களை கைப்பற்றினார்கள். அதிலும் தமிழகத்தில் தடகள வீரர் மாரியப்பன் தங்கவேலு உயரம் தாண்டுதல் போட்டியில் கலந்து கொண்டிருந்தார்.
ஆண்களுக்கான உயரம் தாண்டுதல் போட்டியில் பங்கேற்ற மாரியப்பனுக்கு வெண்கல பதக்கம் கிடைத்தது. இது பாரா ஒலிம்பிக்கில் மாரியப்பன் வெல்லும் மூன்றாம் பதக்கம் ஆகும். ஏற்கனவே பாரா ஒலிம்பிக்கில் தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கங்களை வென்றிருக்கின்றார். தற்போது சொந்த ஊர் திரும்பிய மாரியப்பனுக்கு மேல தாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டது.
சொந்த ஊரில் மாரியப்பனை வரவேற்ற மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி பூங்கொத்து கொடுத்து அவரை வாழ்த்தினார். இதையடுத்து அவர் மக்கள் படைச்சூழ ஊருக்குள் அழைத்துச் செல்லப்பட்டார். அப்போது பேசியவர் வெண்கலம் இந்த முறை வென்றிருந்த நிலையில் அடுத்த பாரா ஒலிம்பிக்கில் நிச்சயம் தங்கம் வெல்வேன் என்று மாரியப்பன் தங்கவேலு தெரிவித்திருந்தார். உடல்நிலை மற்றும் தட்பவெப்ப நிலை காரணமாக இந்த முறை தங்கம் வெல்லும் வாய்ப்பை இழந்ததாக அவர் வருத்தத்துடன் தெரிவித்து இருந்தார்.