tamilnadu
மத்திய, மாநில அரசுகள் இன்னும் எத்தனை நாள்தான் வேடிக்கை பார்க்க போறாங்க.. ராமதாஸ் ஆவேசம்..!
மீனவர்கள் கைதான போதிலும் மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து வேடிக்கை பார்த்து வருகின்றனர் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் குறிப்பிட்டு இருக்கின்றார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை தெரிவித்துள்ளதாவது: “ராமேஸ்வரம் பகுதியை சேர்ந்த 13 மீனவர்கள் வங்க கடல் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது சிங்கள கடற்கரையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளன .
அவர்களின் விசைப்படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டு மீனவர்கள் தாங்கள் பாரம்பரியமாக மீன்பிடித்து வந்த பகுதிகளில் தான் மீன் பிடிக்கிறார்கள். அப்படி இருந்தும் சிங்கள கடற்கரையினர் தொடர்ந்து அவர்களை கைது செய்து வருகிறார்கள். வங்கக்கடலில் மீன் பிடிப்பதற்காக விதிக்கப்பட்ட இரண்டு மாத தலைக்காலம் முடிவடைந்து ஜூன் 16ஆம் தேதி தான் மீனவர்கள் தொடர்ந்து கடலுக்கு சென்று மீன் பிடித்து வருகிறார்கள்.
தற்போது 35 நாட்கள் மட்டுமே ஆகும் நிலையில் இதுவரை ஏழு கட்டங்களில் மொத்தம் 89 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுவரை 10 பேர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட மீனவர்கள் 35 நாட்களுக்கும் மேலாக சிறையில் வாடி வருகிறார்கள். தமிழக மீனவர்களை எல்லை தாண்டி வந்து கைது செய்தது மட்டுமில்லாமல் அவர்களை ஒரு மாதத்திற்கு மேலாக சிறையில் வைத்திருப்பது என்ன நியாயம்.
இதனை தடுக்க மத்திய மாநில அரசுகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்திய இலங்கை அதிகாரிகள், தமிழக இலங்கை மீனவர்கள் ஆகியோர் பங்கேற்கும் பேச்சு வார்த்தைக்கு ஏற்பாடு செய்து உடனே மீனவர்களை விடுவிப்பதற்கான அனைத்தையும் செய்ய வேண்டும். தமிழக முதல்வர் ஒவ்வொரு முறையும் மீனவர்கள் கைது செய்யப்படும் போதும் வெளியுறவுத்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதுவதுடன் அவரது கடமையை முடித்துக் கொள்கின்றான். யாரையும் சந்தித்து பேசக்கூட அவர் தயாராக இல்லை என்று குற்றச்சாட்டு இருக்கின்றார்.