Latest News
கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருது… பாடகி சுசீலா, மு மேத்தா-வுக்கு அறிவிப்பு…!
முத்தமிழ் கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருது வழங்கப்பட்டு வருகின்றது.
மறைந்த முத்தமிழ் அறிஞர் கலைஞரின் நூற்றாண்டு விழாவை கொண்டாடும் விதமாக வழக்கமாக வழங்கப்படும் கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருதுடன் சிறப்பினமாக பெண்மையை போற்றுவோம் என்ற வகையில் கூடுதல் ஒரு பெண் திரை கலைஞருக்கும் இந்த விருதினை வழங்க முதல்வர் மு க ஸ்டாலின் கடந்த ஜூலை 11ஆம் தேதி உத்தரவிட்டிருந்தார்.
இந்த உத்தரவின் படி திரைப்பட இயக்குனர் எஸ் பி முத்துராமன் தலைமையிலான குழு பரிந்துரை செய்து தமிழ் பேராசிரியரும் புதுக்கவிதைக்கு ஏற்றம் கொடுத்த சாகித்ய அகாடமி விருது பெற்றவருமான கவிஞர் மு மேத்தாவுக்கும், திரையுலகில் 25 ஆயிரம் மேற்பட்ட பல மொழி பாடல்களைப் பாடி புகழ்பெற்ற தென்னிந்தியாவின் இசை குரல் என்றும் மெல்லிசை அரசி என பாராட்டப்பட்டு முத்தமிழறிஞர் கலைஞரால் பல நிகழ்வுகளில் பாராட்டப்பட்ட பிரபல பின்னணி பாடகி பி சுசீலாவுக்கும் 2023 ஆம் ஆண்டிற்கான கலைஞர் நினைவு களத்துறை வித்தகர் விருது வழங்க பரிந்துரை செய்யப்பட்டது.
அதன்படி முதல்வர் மு க ஸ்டாலின் கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருதினை வரும் 30-ஆம் தேதி தலைமை செயலகத்தில் வழங்கி சிறப்பிக்க இருக்கின்றார். இந்த தகவலை தற்போது வெளியிட்டு இருக்கிறார்கள்.