Latest News
இந்த ஊர்காரங்க கவனமா இருங்க!…அடிச்சு பெய்ய போகுதாமே மழை?…
தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே தட்ப வெட்ப சூழ்நிலையில் அதிக மாற்றம் இருந்து வருகிறது. மாநிலத்தின் ஒரு சில இடங்களில் மழை பெய்து வருகிறது. சில இடங்களில் லேசானது முதல் மிதமானது வரையிலான மழை பெய்து வருகிறது. காற்றின் வேகமும் திடீரென அதிரித்து வருகிறது. பலமாக வீசி வரும் காற்றினால் ஒரு சில இடங்களில் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளானார்கள்.
இந்நிலையில் சென்னை வானிலை ஆராய்ச்சி மையம் இன்று மற்றும் நாளைக்கான தமிழகம் குறித்த வானிலை அறிக்கையை சொல்லியுள்ளது. இந்த அறிக்கையில் தமிழத்தின் ஒரு சில மாவட்டங்களில் கன மழைக்கு ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமானது வரையிலான மழை பெய்யும் என தெரிவித்துள்ளது.
சில மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
மேற்கு திசை காற்றின் காரணமாக மத்திய மேற்கு வங்கக்கடலில் புதிதாக காற்று அழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது. இதனால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மிகக் கன மழை பெய்யக்கூடும் என எச்சரித்துள்ளது.
இந்த கணிப்பின்படி நீலகிரி, கோயம்பத்தூர் மாவட்ட மலைப்பகுதிகளில் அதி கனமழை பெய்யும் என சொல்லியிருக்கிறது. இந்த மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.
இதே போல திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப்பகுதிகளிலும் ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், கன்னியாகுமரி மாவட்டங்களின் ஒரு சில இடங்களில் மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
அதே போல தரைக்காற்று மணிக்கு முப்பது முதல் நாற்பது கிலோ மீட்டர் வரையிலான வேகத்தில் வீசக்கூடும் எனவும். இன்றும், நாளையும் தமிழகத்தின் ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு அதிகம் உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.