Encounter
Encounter

ரவுடி என்கவுண்டர்…சந்தேகத்தை கிளப்பியுள்ள பழனிசாமி…

பகுஜன் சமாஜ் கட்சி தமிழக தலைவர் ஆம்ஸ்ட்ராங் அன்மையில் சென்னையில் படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை சம்பவத்தின் மீது வழக்குப் பதிவு செய்து காவல் துறையியனர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் தொடர்புடையதாக சிலர் சரணடைந்தனர். அவர்களிடம் காவல் துறையினர் தீவர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த வழக்கில் தொடர்புடையதாக பதினோரு பேர் தனிதனியாக விசாரிக்கப்பட்டனர்.  இந்நிலையில் காவல் துறையினரின் பிடியில் இருந்த ரவுடி திருவேங்கடத்தை விசாரிக்க காவல் துறையினர் அழைத்துச் சென்றுள்ளனர். மாதவரம், வெஜிடேரியன் வில்லேஜ் பகுதிக்கு சென்று கொண்டிருக்கும் போது காவல் துறையினரிடமிருந்து தப்ப நினைத்திருக்கிறார் திருவேங்கடம்.
அப்போது தான் பதுக்கி வைத்திருந்த நாட்டு துப்பாக்கியை கையில் எடுத்து காவல் துறையினரை சுட்டிருக்கிறார் ரவுடி திருவேங்கடம்.

அவரது தாக்குதலிலிருந்து காப்பாற்றிக் கொள்ள காவல் துறையினரும் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இதில் காவல் துறை உதவியாளர்  சுட்டதில்  ரவுடி திருவேங்கடம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இன்று அதிகாலையில் இந்த என்கவுண்டர் நடந்துள்ளது.

Armstrong Edappadi Palanisamy
Armstrong Edappadi Palanisamy

இந்நிலையில் சரணடைந்தவரை காவல் துறையினர் எதற்கு அவசர அவசரமாக அதுவும் அதிகாலையில் திருவேங்கடத்தை அழைத்து சென்றனர் என தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

கொலைக் குற்றவாளியை கையில் விலங்கு அணிவித்து தான் வெளியில் கூட்டிச் செல்ல வேண்டும் என சொல்லியதோடு, ஏற்கனவே படுகொலை செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங்கின் குடும்பத்தினர் சரணடைந்தவர்கள் உண்மையான குற்றவாளிகள் அல்ல என சொல்லியிருக்கும் போது இந்த என்கவுண்டர் விவகாரம் சந்தேகத்தினை கிளப்பியுள்ளதாக எடப்பாடி பழனிசாமி சொல்லியிருக்கிறார்.