ஆடி மாதத்தில் அம்மனை தரிசிக்க ஒரு நல்ல வாய்ப்பு… ஒரு நாள் சுற்றுலா… தமிழக அரசின் சிறப்பு ஏற்பாடு..!

ஆடி மாதத்தில் அம்மனை தரிசிக்க ஒரு நல்ல வாய்ப்பு… ஒரு நாள் சுற்றுலா… தமிழக அரசின் சிறப்பு ஏற்பாடு..!

ஆடி மாதத்தில் அம்மன் கோயில்களுக்கு ஒரு நாள் சிறப்பு சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றது.

தமிழகத்தில் சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பாக ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதத்தில் அம்மன் கோயில்களுக்கு ஒரு நாள் சிறப்பு சுற்றுலா ஏற்பாடு செய்யப்படும். அதன்படி காலை 8:30 மாலை 7 மணி வரை அம்மன் கோயில்களுக்கு வேன் மூலமாக அழைத்துச் செல்லப்படுவார்கள். பாரிமுனை காளிகாம்பாள் கோவில், ராயபுரம் அங்காள பரமேஸ்வரி, திருவெற்றியூர் வடிவுடையம்மன், பெரியபாளையம் பவானி அம்மன்,

புட்லூர் அங்காள பரமேஸ்வரி திருமலைவாயல், திருவுடை அம்மன் மற்றும் பச்சையம்மன் உள்ளிட்ட பல கோயில்களுக்கு பக்தர்கள் அழைத்துச் செல்லப்படுவார்கள். மதியம் கோவிலில் அன்னதானம் வழங்கப்படும் இதற்கு ஆயிரம் ரூபாய் கட்டணம் ஆகும். மேலும் மற்றொரு திட்டமாக கோல விழியம்மன், தி.நகர் ஆலயம்மன்,

முப்பாத்தம்மன், சைதாப்பேட்டை பிடாரி இளங்காளி அம்மன், பெசன்ட் நகர் அஷ்டலட்சுமி, மாங்காடு காமாட்சி அம்மன், திருவேற்காடு தேவி கருமாரியம்மன் ஆகிய கோவில்களில் அம்மனை தரிசனம் செய்வதற்கு ரூபாய் 800 கட்டணமாக வசூல் செய்யப்பட்டுள்ளது.

தமிழக சுற்றுலா வளர்ச்சி கழக அலுவலகத்தில் இருந்து செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் இந்த கோயில்களுக்கு தரிசனத்திற்கு அழைத்துச் செல்வார்கள். ஆடி அம்மன் கோவில் சுற்றுலாவிற்கு ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்ய வேண்டும் என்று அதிகாரிகள் தெரிவித்து இருக்கிறார்கள்.