Connect with us

தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் இது கட்டாயம் இருக்க வேண்டும்… அரசுக்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு…!

Latest News

தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் இது கட்டாயம் இருக்க வேண்டும்… அரசுக்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு…!

அனைத்து மாவட்டங்களிலும் முதியோர் காப்பகங்கள் அமைக்க வேண்டும் என்று அரசுக்கு மதுரை ஐகோர்ட் உத்தரவிட்டிருக்கின்றது.

தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த அதிசய குமார் என்ற நபர் மதுரை ஐகோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் தமிழகத்தில் திருச்செந்தூர், ராமேஸ்வரம், மதுரை, கன்னியாகுமரி, வேளாங்கண்ணி உள்ளிட்ட பகுதிகளில் கோவில் வளாகங்கள், பேருந்து நிலையங்களில் ஆதரவற்ற முதியவர்கள் பலர் ஆதரவின்றி தவித்து வருகிறார்கள்.

இவர்களை பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் நல பராமரிப்பு சட்டம் 2009 படி தமிழகம் முழுவதும் ஆதரவற்ற முதியோர் காப்பகம் அமைத்து பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும், தமிழகத்தில் 2021 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி 13 சதவீதம் மூத்த குடிமக்கள் இருக்கிறார்கள்.

2031 ஆம் ஆண்டு இது 18.2 அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்படுகின்றது. ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் அடிப்படை வசதிகளை செய்து தருவது அவசியம். குறிப்பாக குடிமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டு உள்ளது” என்று அந்த முடிவில் தெரிவித்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி சுப்ரமணியன் விக்டோரியா ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள் சட்டப்படி ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு முதியோர் காப்பகத்தை அரசு நடத்த வேண்டும். ஆனால் பெரும்பாலும் தனியார் தொண்டு நிறுவனங்கள்தான் நடத்தி வருகின்றன. இது ஏற்புடையது அல்ல. இதனால் தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் குறைந்தது ஒரு முதியோர் இல்லமாவது கட்டுவதற்கான பணிகளை அடுத்த ஆறு மாதத்திற்குள் தொடங்க வேண்டும் என்று உத்தரவிட்டு இந்த வழக்கை நீதிபதி முடித்து வைத்தார்.

More in Latest News

To Top