Connect with us

வெந்த புண்ணுல வேல பாய்ச்சும் வேலை… சென்னையில் கார் பந்தயம்… ஓ.பன்னீர்செல்வம் ஆவேசம்…!

tamilnadu

வெந்த புண்ணுல வேல பாய்ச்சும் வேலை… சென்னையில் கார் பந்தயம்… ஓ.பன்னீர்செல்வம் ஆவேசம்…!

தமிழக அரசு நடத்துதும் இந்த கார் பந்தய போட்டியானது வெந்த புண்ணில் வேல பாய்ச்சும் செயல் என்று ஓ பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்திருக்கின்றார். இது தொடர்பாக முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருந்ததாவது: “சொத்து வரி உயர்வு, குடிநீர் வடி உயர்வு,

மின் கட்டண உயர்வு, வழிகாட்டி மதிப்பீடு உயர்வு, முத்திரை கட்டண உயர்வு, பதிவு கட்டண உயர்வு, வாகன கட்டண உயர்வு, கட்டட அனுமதி கட்டண உயர்வு என்று பல்வேறு கட்டணங்களை உயர்த்தி தமிழக அரசு தமிழக மக்களை பல இன்னலுக்கு ஆளாக்கியுள்ள நிலையில் கார் பந்தயத்தை நடத்தப்போவதாக திமுக அரசு அறிவித்திருப்பது மக்களுக்கு வெந்த புண்ணில் வேல பாய்ச்சும் செயலாகும்.

தமிழ்நாட்டினுடைய கடன் 8, 33, 362 கோடி ஆகவும், தமிழகத்தில் நிதி பற்றாக்குறை 1,08,690 கோடி ரூபாயாகவும் இருந்து வருகின்றது. இந்த நிலையில் கார்பந்தயத்தை நடத்த வேண்டிய அவசியம் என்ன என்பதை திமுக அரசு எண்ணி பார்க்க வேண்டும். சென்னையில் கார் பந்தயம் நடத்துவதன் காரணமாக பொதுமக்களுக்கு எந்த பயனும் ஏற்படப் போவது கிடையாது.

இந்த கார்பந்தயம் திட்டத்தை திமுக அரசு உடனடியாக கைவிட வேண்டும் என்பது அதிமுக தொண்டர்களின் உரிமை மீட்பு குழுவின் சார்பாக திமுக அரசை வலியுறுத்தி கேட்கின்றேன்” என்று அவர் தனது அறிக்கையில் கூறியிருக்கின்றார்.

More in tamilnadu

To Top