Latest News
மக்கள் கவனத்திற்கு… ரேஷன் கடைகள் வரும் 31ஆம் தேதி இயங்கும்… வெளியான முக்கிய அறிவிப்பு..!
தமிழகத்தில் வரும் 31ஆம் தேதி அனைத்து ரேஷன் கடைகளும் இயங்கும் என்று உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை தெரிவித்திருக்கின்றது.
தமிழகத்தில் ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு அரிசி, கோதுமை, சர்க்கரை, பாமாயில், துவரம் பருப்பு போன்ற பொருள்கள் மலிவான விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. தமிழ்நாடு நுகர்வோர் வாணிப கழகம் மூலமாக கொள்முதல் செய்யப்பட்டு 355 கிடங்குகளில் இருப்பு வைக்கப்பட்டு 36,550 நியாய விலை கடைகள் மூலம் 2 கோடியே 23 லட்சம் குடும்பங்களுக்கு பொருள்கள் வினியோகம் செய்யப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் உணவுப்பொருள் வழங்கள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை சார்பாக வரும் 31ஆம் தேதி அனைத்து ரேஷன் கடைகளிலும் அனைத்து அத்தியாவசிய பொருட்களும் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்திருந்ததாவது: “உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் அனைத்து ரேஷன் கடைகளிலும் மாதத்தின் கடைசி பணி நாளில் இன்றியமையா பண்டங்கள் வினியோகம் மேற்கொள்ளப்படுவதில்லை.
ஆனால் இந்த மாதம் அனைத்து அட்டைதாரர்களும் இன்றியமையா பண்டங்கள் தடையின்றி கிடைக்கும் வகையில் வரும் ஆகஸ்ட் 31ஆம் தேதி அனைத்து ரேஷன் கடைகளிலும் பொருள்கள் விநியோகம் செய்யப்படும்” என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே இதுவரை பொருட்கள் வாங்காதவர்கள் இந்த மாதத்திற்கான பொருட்களை பெற்று பயனடையலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.