tamilnadu
அச்சுறுத்தும் நிபா வைரஸ்… இதெல்லாம் பண்ண வேண்டும்… தமிழக அரசு வெளியிட்ட நெறிமுறை..!
கேரள மாநிலத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு கோழிக்கோடு மற்றும் மல்லபுரம் பகுதிகளில் நிபா வைரஸின் தாக்கம் இருந்தது. தற்போது ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அது தலை தூக்கி இருக்கின்றது. கேரளா மாநிலத்தில் 9-ம் வகுப்பு காய்ச்சல் மற்றும் மூச்சுத் திணறல் மேற்பட்ட நிலையில் மருத்துவர்கள் பரிசோதனை செய்தனர்.
அப்போது அவருக்கு நிபா காய்ச்சல் அறிகுறி இருந்தது தென்பட்டது. தீவிரமாக அந்த சிறுவனுக்கு சிகிச்சை அளித்து வந்த போதிலும் சிகிச்சை பலனின்றி அவர் இன்று பகல் உயிரிழந்தார். இந்நிலையில் நிபா வைரஸ் குறித்து தமிழகத்தில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக சுகாதாரத்துறை அரசு சார்பில் வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளது.
காய்ச்சல், தலைவலி, மயக்கம், சுவாசப் பிரச்சனை ஆகியவை முக்கிய அறிகுறிகள். ரத்தம், தொண்டைச்சளி, சிறுநீர் மாதிரிகள் போன்றவற்றை எடுக்க வேண்டும். அறிகுறிகள் கண்டறியப்பட்ட நோயாளிகளை உடனடியாக பரிசோதனை செய்ய வேண்டும். பரிசோதனை முடிவுகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட வேண்டும்.
பரிசோதனை மேற்கொள்ளும் போது உரிய பாதுகாப்பு கவசம் அணிய வேண்டும். நோயாளிகளிடமிருந்து எடுக்கப்படும் மாதிரிகள் இரண்டு முதல் மூன்று டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் பாதுகாக்கப்பட்டு 48 மணி நேரத்திற்குள் ஆய்வகத்திற்கு அனுப்ப வேண்டும். காய்கறிகள் மற்றும் பழங்களை நன்றாக கழுவி விட்டு சாப்பிடுங்கள். கிணறுகள் குட்டைப் பகுதிகள், தோட்டங்கள் போன்றவற்றில் செல்வதை தவிர்க்க வேண்டும் உள்ளிட்ட நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.