Latest News
தமிழகத்தின் 4 புதிய அமைச்சர்கள்… அண்ணா, கலைஞர் நினைவிடத்தில் மரியாதை…!
தமிழகத்தில் புதிதாக பதவி ஏற்றுக்கொண்ட 4 அமைச்சர்கள் அண்ணா கலைஞர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தி இருக்கிறார்கள்.
தமிழக அமைச்சரவையில் மாற்றம் ஏற்பட உள்ளதாக நேற்று இரவு அறிவிப்பு வெளியானது. அதன்படி ஜாமினில் வெளிவந்த முன்னாள் அமைச்சரான செந்தில் பாலாஜி மீண்டும் அமைச்சராக பதவியேற்று இருக்கின்றார். மேலும் அவருக்கு விரைவில் இலாக்கா ஒதுக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
அவருடன் சேர்ந்து 4 அமைச்சர்கள் இன்று பதவியேற்றுக் கொண்டனர். இவர்களுக்கு ஆளுநர் ஆர் என் ரவி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். அது மட்டுமில்லாமல் உதயநிதி ஸ்டாலின் துணையை முதல்வராக பதவி ஏற்றுக்கொண்டார். மேலும் இன்று மதியம் 3:30 கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெற்றது.
பதவியேற்ப்பு நிகழ்ச்சியில் புதிய அமைச்சர்களுக்கு ரகசிய காப்பு மற்றும் பதவி பிரமாணத்தை தமிழக ஆளுநர் ஆர் என் ரவி செய்து வைத்தார். புதிதாக தமிழக அமைச்சரவையில் பதவி ஏற்றுக்கொண்ட அமைச்சர்கள் மெரினாவில் இருக்கும் அண்ணா மற்றும் கருணாநிதி நினைவிடத்திற்கு சென்று மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.