tamilnadu
வங்க கடலில் உருவாகிறது புதிய காற்றழுத்து தாழ்வு பகுதி… வானிலை எச்சரிக்கை…!
வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. வங்கக்கடலில் வரும் 29ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கின்றது.
மத்திய கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய வடக்கு வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதாக அறிவித்திருக்கின்றது. மேலும் மேற்கு திசையை காட்டிலும் வேக மாறுபாடு காரணமாக வரும் 29-ம் தேதி வரை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு இருக்கின்றது என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
மேலும் சென்னையில் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு நகரின் பல பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருக்கின்றது என வானிலை ஆய்வு மையம் எச்சரித்து இருக்கின்றது.