tamilnadu
ஆளுநர் ஆர் என் ரவியை சந்தித்த புதிய தலைமைச் செயலாளர் முருகானந்தம்…!
தமிழகத்தில் புதிய தலைமைச் செயலாளராக முருகானந்தம் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் அவர் தமிழக ஆளுநர் ஆர்என் ரவியை சந்தித்திருக்கின்றார். தமிழ்நாட்டின் தலைமைச் செயலாளராக இருந்த சிவ்தாஸ் மீனா ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவராக தற்போது நியமனம் செய்யப்பட்டு இருக்கின்றார்.
இதனால் தமிழ்நாட்டுக்கு புதிய தலைமைச் செயலாளர் பதவி காலியாக இருந்தது. இதையடுத்து தமிழக அரசின் ஐம்பதாவது தலைமைச் செயலாளராக முதல்வரின் செயலாளர்களில் ஒருவரான நா முருகானந்தம் ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டு இருக்கின்றார்.
இந்நிலையில் தமிழக ஆளுநர் ஆர்என் ரவியை இன்று முருகானந்தம் சந்தித்து பேசி இருக்கின்றார். மேலும் அவரிடம் தலைமைச் செயலாளராக பொறுப்பேற்ற பின்னர் வாழ்த்துக்களையும் பெற்றிருக்கின்றார். அப்போது தலைமைச் செயலாளருடன் பொதுத்துறை செயலாளர் ரீட்டா ஹரிஷ் தாக்கரும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.