Connect with us

புதிய தலைமைச் செயலாளராக முருகானந்தம் நியமனம்… வெளியான முக்கிய அறிவிப்பு…!

tamilnadu

புதிய தலைமைச் செயலாளராக முருகானந்தம் நியமனம்… வெளியான முக்கிய அறிவிப்பு…!

தமிழக அரசின் புதிய தலைமைச் செயலாளராக முருகானந்தம் ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டிருக்கின்றார்.

தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டிருக்கின்றார். கடந்த ஜூலை 1ஆம் தேதி தலைமைச் செயலாளராக பதவியேற்ற சிவ்தாஸ் மீனா ஓராண்டுக்கு மேலாக இந்த பதவியில் நீடித்து வந்தார்.

இந்நிலையில் சிவ்தாஸ் மீனா மாற்றம் செய்யப்பட்டுள்ளதால் தமிழக அரசின் புதிய தலைமைச் செயலாளராக தற்போது முதலமைச்சரின் தனி செயலாளராக இருக்கும் முருகானந்தம் ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டு இருக்கின்றார். 50-வது தலைமைச் செயலாளராக முருகானந்தம் நியமிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

இவர் 1991 ஆம் ஆண்டு ஐஏஎஸ் தேர்ச்சி பெற்று பணியில் சேர்ந்தவர். பல்வேறு துறைகளில் பணியாற்றி இருக்கின்றார். 2001 முதல் 2004 வரை கோவை மாவட்ட கலெக்டராக பணியாற்றினார். பின்னர் ஊரக வளர்ச்சித் துறையின் இணைச் செயலாளர் டெல்லி தமிழ்நாடு இல்லத்தின் முதன்மை உறைவிட ஆணையராகவும் பணியாற்றி இருக்கின்றார். மேலும் கடந்த அதிமுக ஆட்சியில் தொழில்துறை முதன்மை செயலாளராக பதவி வைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

More in tamilnadu

To Top