Connect with us

முதல்ல சாலையை சரி பண்ணுங்க… அப்புறம் சுங்கவரி கேளுங்க… எம்பி தயாநிதி மாறன் காட்டம்…!

Latest News

முதல்ல சாலையை சரி பண்ணுங்க… அப்புறம் சுங்கவரி கேளுங்க… எம்பி தயாநிதி மாறன் காட்டம்…!

முதலில் சாலையை சரி செய்து விட்டு அதற்குப் பிறகு சுங்க வரியை வாங்கிக் கொள்ளலாம் என்று எம்பி தயாநிதி மாறன் காட்டமாக தெரிவித்து இருக்கின்றார்.

மத்திய சென்னை திமுக எம் பி-ஆன தயாநிதி மாறன் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சரான நிதின் கட்கரிக்கு கடிதம் ஒன்றை எழுதி இருக்கின்றார். அதில் சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் நீண்ட நாட்களாக நடக்கும் விரிவாக்க பணிகளும் மிக மோசமான நிலையில் குண்டும் குழியுமாக இருக்கின்றது.

சாலை மோசமாக உள்ளதால் சுங்க கட்டணம் வசூலிப்பது என்பது நியாயமற்ற செயல். சாலையை முறையாக பராமரித்த பிறகு சுங்க கட்டணம் வசூல் செய்ய வேண்டும். சாலையை சீரமைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தனது சமூக வலைதள பக்கம் மூலம் கோரிக்கை வைத்திருக்கின்றார்.

சாலையை சரியாக பராமரிக்காமலும் அந்த பணிகளை மேற்கொள்ளாமலும் சுங்க வரியை மட்டும் சரியாக வாங்கிக் கொள்வது எந்த விதத்தில் நியாயம் என்று அவர் கேள்வி எழுப்பி இருக்கின்றார்.

More in Latest News

To Top