Latest News
10 நாட்களில் துணை முதல்வராவார் உதயநிதி ஸ்டாலின்… அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேட்டி…!
இன்னும் 10 நாட்களில் உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சர் ஆவார் என்று அமைச்சர் தா.மோ அன்பரசன் தெரிவித்து இருக்கின்றார்.
திமுக பவள விழா பொதுக்கூட்டமானது வருகிற 28ஆம் தேதி சனிக்கிழமை காஞ்சிபுரத்தில் உள்ள பச்சையப்பன் ஆண்கள் கல்லூரி திடலில் நடைபெற உள்ளது. திமுக பவள விழா பொதுக்கூட்டம் குறித்து முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று நடைபெற்றது.
மேலும் முதலமைச்சர் திமுக தலைவருமான மு க ஸ்டாலின் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் துறை முருகன், ஏ வ வேலு, க பொன்முடி, சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, எம்பிக்கள் திருச்சி சிவா, அ ராசா உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில் பவள விழா பொதுக்கூட்ட நிகழ்ச்சி ஏற்பாடுகள் குறித்து நிர்வாகிகளுக்கு பல்வேறு அறிவுரைகளை முதல்வர் மு க ஸ்டாலின் வழங்கியதாக கூறப்படுகின்றது.
திடீரென்று நடந்த இந்த கூட்டம் திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் இடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. ஏனென்றால் விளையாட்டு துறை அமைச்சரான உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக பொறுப்பேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியது. இதையடுத்து சென்னையில் நடந்த திமுக பவள விழாவில் பேசிய முன்னாள் மத்திய இணை பழனிமாணிக்கம் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை துணை முதலமைச்சர் ஆக அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
இதையடுத்து திமுகவில் மீண்டும் இந்த பேச்சு என தொடங்கி இருக்கின்றது. இந்நிலையில் காஞ்சிபுரத்தில் அமைச்சர் தா.மோ அன்பரசன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது கூறியவர் அடுத்த 10 நாட்களில் அமைச்சர் உதயநிதி துணை முதலமைச்சராக அறிவிக்கப்படுவார். நாளை கூட அறிவிப்பு வெளியாகலாம். இன்னும் ஓரிரு நாட்களில் அறிவிப்பு வெளியாகும் 10 நாட்களில் துணை முதலமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பதவி ஏற்பார் என திட்டவட்டமாக தெரிவித்து இருக்கிறார்கள்.