tamilnadu
மு.க ஸ்டாலின் பயணித்த விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்… பரபரப்பு சம்பவம்…!
முதல்வர் மு க ஸ்டாலின் தமிழகத்தில் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக நேற்று இரவு அமெரிக்கா புறப்பட்டு சென்றார். சென்னை விமான நிலையத்திலிருந்து இரவு 10.16 மணிக்கு புறப்பட்ட எமிரேட் விமான மூலம் துபாய் சென்ற அங்கிருந்து வேறு விமானம் மூலமாக அமெரிக்கா சென்றிருக்கின்றார்.
வரும் செப்டம்பர் 14ஆம் தேதி வரை 19 நாட்கள் அவர் அரசு முறை பயணம் மேற்கொள்ள இருக்கின்றார். இன்று இரவு 7 சான்பிரான்சிஸ்கோ சென்றடையும் முதல்வர் நாளை அங்கு நடைபெறும் முதலீட்டாளர் மாநாட்டில் கலந்து கொள்ள இருக்கின்றார் . 31ஆம் தேதி சான்பிரான்சிஸ்கோவில் புலம்பெயர்ந்த தமிழர்களை சந்தித்து பேச இருக்கின்றார்.
இதை தொடர்ந்து அமெரிக்காவில் பல்வேறு நிறுவனங்களின் தலைவர்களையும் சந்திக்க இருக்கின்றார். செப்டம்பர் இரண்டாம் தேதி அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோவில் இருந்து சிகாகோ செல்லும் முதல்வர் ஸ்டாலின் தொடர்ந்து 12-ம் தேதி வரை தங்கி பல்வேறு நிறுவனங்களின் சிஇஓக்கள் மற்றும் தலைவர்கள் உள்ளிட்ட முதலீட்டாளர்களை சந்திக்க இருக்கின்றார் .
அங்கு ஏழாம் தேதி அயழக தமிழர்களுடனும் கலந்துரையாடுகின்றார். இந்நிலையில் சென்னையில் இருந்து முதல்வர் மு க ஸ்டாலின் பயணித்த எமிரேட்ஸ் விமானத்திற்கு நேற்று வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியிருக்கின்றது. சென்னையிலிருந்து விமானத்தில் துபாய் சென்று அங்கிருந்து அமெரிக்கா செல்வதாக முதலமைச்சரின் பயணம் திட்டம் இருந்தது.
அதன்படி சென்னை விமான நிலையத்தில் இரவு 8.40 மணிக்கு மு க ஸ்டாலின் சென்றடைந்தார். பிறகு விமான நிலையத்திற்கு சென்று அமர்ந்து இரவு 10.16 மணிக்கு புறப்பட்ட எமிரேட் விமானத்தில் மு க ஸ்டாலின் பயணம் செய்தார். இந்த விமானம் துபாயில் தரை இறங்கியதும் அங்கிருந்து வேறு விமானம் மூலம் அமெரிக்கா செல்ல வேண்டும்.
இந்நிலையில் சென்னையில் இருந்து எமிரேட்ஸ் விமானம் மூலம் சென்று கொண்டிருந்தபோது அந்த விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததை அறிந்து அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தார்கள். பின்னர் அதிகாலை துபாய் சென்றடையும் வரை நான்கு மணி நேரமும் அதிகாரிகள் மிகவும் பதற்றத்துடன் இருந்தார்கள்.
இன்று அதிகாலையில் துபாயில் விமானம் தரை இறங்கிய பிறகு விமானம் முழுவதும் சோதனை செய்யப்பட்டது. அப்போதுதான் வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என்பது தெரிய வந்தது. தற்போது முதல்வர் மு க ஸ்டாலின் துபாயில் இறங்கி சில மணி நேரம் ஓய்வெடுத்தப்பட்டு பின்னர் அமெரிக்கா புறப்பட்டு செல்ல இருக்கின்றார்.