tamilnadu
நாட்டு நடப்பு தெரிஞ்சிருக்கணும், இல்லையா மூளையாவது இருக்கணும்… இபிஎஸ்ஐ சாடிய மு க ஸ்டாலின்…!
திருவொற்றியூர் எம்எல்ஏ கேபி சங்கர் திருமண விழாவில் கலந்து கொண்ட முதல்வர் மு க ஸ்டாலின் உரையாற்றியிருந்தார். அப்போது அவர் பேசியிருந்ததாவது: “கலைஞர் உருவம் பொறித்த நாணயம் இந்தியில் உள்ளது என்ற எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்திருக்கின்றார். முதலில் நாட்டு நடப்பு தெரிய வேண்டும் அல்லது இபிஎஸ் மண்டைக்குள் மூளையாவது இருக்க வேண்டும்.
ஏற்கனவே அண்ணா எம்ஜிஆர் போன்றவர்களுக்கு வெளியிடப்பட்ட நாணயத்தை இபிஎஸ் பார்த்திருக்க மாட்டார் போல, எல்லா தலைவர்களின் நாணயத்திலும் இந்தி தான் இடம் பெற்றிருக்கும். இப்படி ஒரு எதிர்க்கட்சித் தலைவர் நமக்கு வாய்த்திருக்கின்றார். அண்ணாவிற்கு வெளியிடப்பட்ட நாணயத்தில் அவர் தமிழ் கையெழுத்தை கலைஞர் தான் இடம்பெறச் செய்தார்.
ஜெயலலிதா அம்மையாரால் உருவாக்கப்பட்டவர்கள் ஒரு இரங்கல் கூட்டம் ஆவது அவருக்கு நடத்தி இருக்கிறார்களா? இரங்கல் கூட்டம் நடத்தாத அதிமுகவினருக்கு கலைஞர் நாணயம் வெளியீட்டு விழாவை விமர்சிப்பதற்கு கூட அருகதை கிடையாது. இபிஎஸ் போன்று ஊர்ந்து சென்று பதவி வாங்கும் பழக்கம் திமுகவிற்கு கிடையாது. சங்கரைப் போல் எனக்கும் கோபம் வரும். ஆனால் கோபம் உள்ள இடத்தில் தான் குணம் இருக்கும். அண்ணா மீது ஆணையிட்டு சொல்கின்றேன், நமக்கென்று இருக்கும் உரிமை விட்டுக் கொடுக்க மாட்டோம்” என்று அவர் தெரிவித்திருந்தார்.