Connect with us

முதல்வரின் தனி செயலாளர்கள் மாற்றம்… தமிழக அரசு அதிரடி அறிவிப்பு…!

tamilnadu

முதல்வரின் தனி செயலாளர்கள் மாற்றம்… தமிழக அரசு அதிரடி அறிவிப்பு…!

தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களின் தனிச் செயலாளர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “முதல்வர் மு க ஸ்டாலின் செயலாளர்கள் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறார்கள்.

முதலமைச்சரின் 1-வது தனி செயலாளராக உமாநாத் ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டு இருக்கின்றார். இரண்டாவது தனி செயலாளராக சண்முகம் ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டு இருக்கின்றார். மூன்றாவது தனிச்செயலாளராக அணு ஜார்ஜ் ஐஏஎஸ் நிறுவனம் செய்யப்பட்டு இருக்கின்றார். முதலமைச்சர் தனிச்செயலாளராக இருந்த முருகானந்தம் தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டிருக்கும் நிலையில் முதலமைச்சரின் தனி செயலாளராக நியமிக்கப்பட்டவர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தனிச்செயலாளர் உமாநாத்துக்கு வணிகவரி, பொதுத்துறை, எரிச்சக்தி, நெடுஞ்சாலை, தொழில்துறை, நகராட்சி, நிர்வாகம், பொதுப்பணி உள்ளிட்ட 13 துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கின்றது. முதலமைச்சரின் தனி செயலாளராக நியமிக்கப்பட்டிருக்கும் சண்முகத்திற்கு 12 துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது, மேலும் அணு ஜார்ஜ்க்கு 11 துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு இருக்கின்றன. முதலமைச்சரின் இணைச்செயலாளராக நியமிக்கப்பட்டிருக்கும் லட்சுமிபதிக்கு 9 துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கின்றது என்று தகவல் வெளியாகி இருக்கின்றது.

 

More in tamilnadu

To Top