tamilnadu
நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த தமிழர்… நிவாரணம் அறிவித்த முதல்வர்…!
கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள காரணத்தினால் அங்கு கனமழை கொட்டி தீர்த்து வருகின்றது. இன்று அதிகாலை வயநாட்டில் பெய்த கனமழையால் நள்ளிரவில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. வயநாடு மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பட்டி, சூரல்மலை, முண்டகை ஆகிய பகுதிகளில் அடுத்தடுத்து நிலச்சரிவுகள் ஏற்பட்டது.
இதில் முண்டகையில் பெய்த கனமழையால் பாலம் அடித்து செல்லப்பட்டது. நிலச்சரிவில் சிக்கிய பலர் உயிரிழந்துள்ளனர். 500 வீடுகளில் வசித்து வரும் 400 குடும்பங்களை சேர்ந்த 1000 பேர் சிக்கி இருக்கிறார்கள். இதில் காளிதாஸ் என்பவர் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்திருக்கின்றார்.
இவர் உடல் மேற்படி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. விரைவில் அவரின் சொந்த ஊரான கூடலூருக்கு கொண்டு செல்லப்படும் என்று கூறப்படுகின்றது. கேரள நிகழ்ச்சியில் சிக்கி உயிரிழந்த தமிழரின் குடும்பத்தினருக்கு முதல்வர் மு க ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து இருக்கின்றார். மேலும் இந்த நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த காளிதாஸ் குடும்பத்தினருக்கு 3 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று முதல்வர் மு க ஸ்டாலின் தெரிவித்திருக்கின்றார்.