Connect with us

ரொம்ப சோதிக்காதிங்கடா என்னைய… கடுப்பான அமைச்சர் பொன்முடி…!

tamilnadu

ரொம்ப சோதிக்காதிங்கடா என்னைய… கடுப்பான அமைச்சர் பொன்முடி…!

சென்னை சைதாப்பேட்டையில் உள்ள தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற உலக அரசியலமைப்பு நாள் நிறைவு விழா நடைபெற்றது. இதில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்மொழி பங்கேற்று உரையாற்றினார். அப்போது Unitary State என்றால் என்ன என்று மாணவர்களை நோக்கி பொன்மொழி கேள்வி எழுப்பினார். இதற்கு யாரும் பதில் கூறவில்லை. இதையடுத்து Unitary State என்றால் என்ன என்று கூடவா? அரசியல் அறிவியல் படிக்கும் மாணவர்கள் இன்னும் படிக்கவில்லை என்று கூறினார்.

மேலும் Unitary State ஆட்சி முறையில் உள்ள நாடு எது என்று மாணவர்களை நோக்கி கேட்க அப்போது மாணவர் ஒருவர் இந்தியா என்று கூறினார். இந்திய Unitary State நாடா? என்று கேட்டதும் அமைச்சர் அதிர்ச்சி அடைந்தார். பின்னர் மேடையில் அமைந்திருந்த பல்கலைக்கழகத் துணை வேந்தர் அரசியல் அரசியல் பேராசிரியரை நோக்கி அமைச்சர் அதே கேள்வியை கேட்டார்.

அதற்கு அரசியல் அறிவியல் பேராசிரியர் புதுச்சேரி என்று பதில் அளித்ததார். அமைச்சர் தனது பொறுமையை இழந்து அட நீ ஏயா.. ஒரு ஆளு நீ.. ஒரு அரசியல் அறிவியல் பேராசிரியர் என்ன பாடம் நடத்துறீங்க.. வாத்தியார்களுக்கு முதலில் பயிற்சி கொடுக்க வேண்டும். அதன் பிறகு தான் மாணவர்கள் படிப்பார்கள் என்று கூறி தெரிவித்தார்.

இதையடுத்து Unitary State என்றால் ஒரு மத்திய அரசாங்கம் அதன் கீழே மாநிலங்கள் இருக்காது.. மத்திய அரசாங்கம் மட்டுமே இருக்கும். அதற்கு உதாரணம் பிரிட்டன். அதே மாதிரி Federal State என்பது கூட்டாச்சி. இந்த கூட்டாட்சிக்கு உதாரணம் அமெரிக்கா.. கூட்டாட்சி என்றால் பல மாநிலங்கள் ஒன்றிணைந்து ஒரு மத்திய அரசை உருவாக்கி அதன் கீழே மாநில அரசுகள் இருப்பதற்கு பெயர் தான் கூட்டாட்சி என்று கூறியிருந்தார் .

தமிழ்நாட்டில் உயர்கல்வியின் தரம் இன்னும் பல மடங்கு உயர வேண்டும் என்றால் முனைவர் பட்டம் பெற்ற முன்னாள் பேராசிரியரான அமைச்சர் பொன்முடி தமிழகம் முழுவதும் சென்று இதேபோல கேள்விகளை கேட்க வேண்டும் என்று நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.

More in tamilnadu

To Top