Connect with us

அந்த விஷயத்தை தடுக்க… டாஸ்மாக் கடைகளுக்கு 12,000 பில்லிங் மெஷின்… அமைச்சர் முத்துசாமி பேட்டி…!

Latest News

அந்த விஷயத்தை தடுக்க… டாஸ்மாக் கடைகளுக்கு 12,000 பில்லிங் மெஷின்… அமைச்சர் முத்துசாமி பேட்டி…!

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளுக்கு 12000 பில்லிங் மெஷின் வழங்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் முத்துசாமி தெரிவித்து இருக்கின்றார்.

தமிழக வீட்டு வசதித்துறை மற்றும் மதுவிலக்கு துறை அமைச்சர் முத்துசாமி இன்று ஈரோட்டில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் தெரிவித்திருந்ததாவது “ஃபார்முலா 4 கார் பந்தையத்தால் சென்னை மக்கள் சந்தோஷம் அடைந்து இருக்கிறார்கள். ஆசிய துணைக்கண்டத்தில் வேறு எங்கும் நடக்காத அளவு நடந்துள்ளது.

அதற்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எடுத்த முயற்சி தான் காரணம். சிஎன்சி கல்லூரி அரசு கல்லூரியாக மாற்றுவதற்கு அரசு நடவடிக்கை மேற்கொண்ட நிலையில் கவர்னர் ஒப்புதல் பெற்று மத்திய அரசு ஒப்புதலுக்கு பெறப்படும். தற்போது குடியரசு தலைவர் ஒப்புதல் பெற உள்ளது . இதற்கு பாராளுமன்ற உறுப்பினர் மூலம் வலியுறுத்தப்பட்டு வருகின்றது.

கடந்த 17-ஆம் தொடங்கி வைத்த அதிகடவு அவிநாசி திட்டத்தில் எவ்வித பிரச்சினைகளும் இன்றி அனைத்து பகுதிகளிலும் தண்ணீர் தெளிவாக செல்கின்றது. டாஸ்மாக் விற்பனையை அதிக படுத்த வேண்டும் என்பதால் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. மது விற்பனைக்கு அரசுக்கு வரக்கூடிய வருமானம் என்பதால் விற்பனை குறித்து மறைத்து சொல்வதில் அவசியம் இல்லை .விற்பனை ஒரு சில இடங்களில் குறைந்தால் கண்காணிப்பு செய்ய நடவடிக்கை எடுக்கப்படுகின்றது.

மது பிரியர்கள் மதுப்பழக்கத்தை விட்டு மது கடைகளில் விற்பனை குறைந்து வருமானம் குறைந்தால் அரசு மகிழ்ச்சி அடையும். கூடுதல் விலைக்கு விற்பனை செய்யக்கூடாது என்று மதுக்கடை ஊழியர்களுக்கு எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் டாஸ்மாக் கடைகளில் 12,000 பில்லிங் மெஷின் வாங்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த பில்லிங் மெஷின் நடைமுறைக்கு வரும் போது கூடுதல் விலைக்கு விற்பது தடுக்கப்படும். அதை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்து இருக்கின்றார்.

 

More in Latest News

To Top