Latest News
பள்ளி நிகழ்ச்சிகளை வரையறுப்பதற்கு தனி கமிட்டி… அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி…!
பள்ளி நிகழ்ச்சிகளை வரையறுப்பதற்கு தனி கமிட்டி அமைக்கப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்திருக்கின்றார்.
சென்னை அசோக் நகர் அரசு பள்ளியில் மகாவிஷ்ணு என்பவர் மாணவர்களிடையே மூடநம்பிக்கைகளை விதைக்கும் நோக்கில் பேசியதற்காக இன்று சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார். அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது. காலையில் சென்னை அசோக் நகர் பள்ளியிலும் மாலையில் சைதாப்பேட்டை அரசு பள்ளியிலும் அவர் சொற்பொழிவு ஆற்றி இருக்கின்றார்.
இவை அனைத்தும் மூடநம்பிக்கையை பற்றியும் ஆன்மீகத்தை பற்றியும் சொற்பொழிவாக இருந்ததால் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இது குறித்து தஞ்சையில் செய்தியாளர்களை சந்தித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்திருந்ததாவது: “ஒவ்வொரு குடிமகனும் அறிவு சார்ந்த அரசியலமைப்பை உருவாக்க வேண்டும் என இந்திய அரசியல் அமைப்பு கூறுகின்றது.
தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அமெரிக்காவில் முதலீட்டை ஈர்க்கும் பணியில் இருந்தாலும் மகாவிஷ்ணு விவகாரம் தொடர்பாக உடனடியாக அறிக்கை வெளியிட்டிருக்கின்றார். பள்ளிகளில் நிகழ்ச்சிகளை வரையறுக்க தனி கமிட்டி உருவாக்கப்படும்” என்று முதல்வர் கூறியுள்ளார். இது தொடர்பாக விரைவாக கமிட்டி அமைக்கப்படும். இந்த விவகாரத்தில் மகாவிஷ்ணு மீது சட்டபடி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்திருந்தார்.