Connect with us

பொறுப்பேற்ற பிறகு 200 பள்ளிகளில் ஆய்வு… கொளத்தூரில் நிறைவு செய்ய அமைச்சர் அன்பில் மகேஷ் திட்டம்…!

Latest News

பொறுப்பேற்ற பிறகு 200 பள்ளிகளில் ஆய்வு… கொளத்தூரில் நிறைவு செய்ய அமைச்சர் அன்பில் மகேஷ் திட்டம்…!

பள்ளிக்கல்வித்துறைக்கு அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு 200 பள்ளிகளில் ஆய்வு செய்து முடித்து இருக்கின்றார் அன்பில் மகேஷ் பொய்யாமொழி.

பள்ளி கல்வித்துறை அமைச்சரான அன்பில் மகேஷ் பொய்யாமொழி 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும் நேரடியாக சென்று பள்ளிக்கூடம் மற்றும் பள்ளி கல்வித்துறை சார்ந்த ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றார். அந்த வகையில் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்றத் தொகுதிகளில் இரண்டு வாரத்திற்கு முன்பு தனது முதல் ஆய்வை ஆரம்பித்த இவர் நேற்று ராமநாதபுரம் தொகுதியில் 200 வது ஆய்வை நிறைவு செய்தார்.

பள்ளி மற்றும் மாணவ மாணவியர்களின் கல்வி முறை ஆசிரியர்கள் பாடம் எடுக்கும் இடம் நூலகங்கள் கல்வி அலுவலகங்கள் அலுவலகங்கள் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் சிறுபான்மையினருக்கான பள்ளிகள் என 77 வகையில் ஆய்வு செய்து இருக்கின்றார். தற்போது ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மைய நூலகத்தில் நேற்று தனது 200வது ஆய்வை நிறைவு செய்தார்.

அங்குள்ள பள்ளிக்கூடத்தை ஆய்வு செய்த பிறகு நூலகத்தில் நடைபெறும் புனரமைப்புப் பணிகளை துரிதப்படுத்துமாறு அதிகாரிகளுக்கு ஆணையிட்டார்.தொடர்ந்து மற்ற தொகுதிகளுக்கும் ஆய்வினை மேற்கொள்ள முயற்சியில் இறங்கி இருப்பதாக தெரிவித்திருக்கின்றார். கடைசியாக 234 ஆவது ஆய்வக முதலமைச்சர் மு க ஸ்டாலின் தொகுதியான கொளத்தூர் தொகுதியில் ஆய்வு மேற்கொள்ள உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More in Latest News

To Top