Tamilnadu Flash News

Latest Tamilnadu News | Latest Film News | Tamil Movie Releases | Tamil Cinema |

tamilnadu

என்னது மியா கலிபா பால்குடம் எடுக்குறாங்களா…? சர்ச்சையை கிளப்பிய கோவில் பேனர்…!

கோவில் திருவிழாவில் அடித்து வைக்கப்பட்டிருந்த பேனரில் மியா கலிபா பால்குடம் எடுப்பது போன்ற புகைப்படம் இடம்பெற்று சர்ச்சையை கிளப்பி இருக்கின்றது.

ஆடி மாதத்தில் வரும் வெள்ளிக்கிழமைகளில் அம்மன் கோவில்களில் சிறந்த வழிபாடு நடத்தப்படும். அந்த நாட்களில் கோவில்களில் விளக்கு பூஜை என்ற கூட்டு வழிபாட்டினை பெண்கள் மேற்கொள்வார்கள் .காஞ்சிபுரம் அடுத்த குருவிமலை என்ற பகுதியில் ஆடி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு ஸ்ரீ மாப்பிள்ளை விநாயகர் ஆலயத்தில் அம்மனுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

இந்த விழாவிற்கு அப்பகுதியில் உள்ள இளைஞர்கள் பேனர் அடித்து வைத்திருந்தார்கள். அந்த பேனலில் பிரபல நடிகையான மியா கலிஃபா பால்குடம் எடுப்பது போன்ற புகைப்படத்தை இளைஞர்கள் அச்சிட்டு இருக்கிறார்கள்.

அந்த பேனர் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. மேலும் அந்த பேனரின் இளைஞர்கள் ஆதார் கார்டு வடிவில் தங்களது பெயர், வயது உள்ளிட்ட விவரங்களையும் அதில் அச்சிட்டு இருக்கிறார்கள். அதில் உள்ள சில இளைஞர்களுக்கு 18 வயது கூட பூர்த்தி ஆகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.